பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக வலம் வந்த ஒரு தொகுப்பாளர் என்றால் அது திவ்யதர்ஷினி தான்.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
மேலும் நமது தொகுப்பாளினிகள் சமீபத்தில் எந்த ஒரு பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க விட்டாலும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிகண் படத்தின் நிகழ்ச்சியைக் கூட திவ்யதர்ஷினி தான் தொகுத்து வழங்கினார்.
அதேபோல ராஜமௌலி இயக்கத்தில் உருவான Rrr படம் நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அப்பொழுது கூட அந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தான் தொகுத்து வழங்கினார்.
திவ்யதர்ஷினி சிறந்த தொகுப்பாளராக வலம் வருவது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனக்கு கீழ் வாதம் இருக்கிறது ஆகையால் என்னால் நடக்க முடியவில்லை இதன் காரணமாகத்தான் நான் வீல்சேரில் சென்று வருகிறேன் என புகைப்படத்துடன் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள்.
பொதுவாக திவ்யதர்ஷினி சமீபத்தில் தொலைக்காட்சி பக்கம் மூலம் காட்டாமல் இருந்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் தன்னுடைய முகத்தை மறக்காமல் இருப்பதற்கு அடிக்கடி புகைப்படம் மூலம் தரிசனம் கொடுத்து வருகிறார்.