மக்கள் காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கின்றனர். உணவு பழக்கத்தில் ஒரு சரியான தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். பிடித்த உணவாக இருந்தாலும் சாப்பிட்டால் உடம்பு விழுந்து விடுமோ என்று பயத்துடனே உள்ளார்கள்.
அரிசி சாதம் சாப்பிட்டால் உடம்பு விழுந்து விடுமோ என்ற பயத்தில் கோதுமை ஓட்ஸ் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்கின்றனர். அரிசியை அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால் உடம்பு விழுந்துவிடும் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே கோதுமை 3 வேலை உட்கொண்டாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் இரண்டிலும் பெற்று உள்ளது என்பது உறுதி எனவே காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற தானியங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பருவகால காய்கறி பழங்களை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.