நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் செயலி பார்க்கப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி செய்திகளை அனுப்புதல், வீடியோ அனுப்புதல் ,புகைப்படங்களை பகிர்தல் மற்றும் வீடியோ கால் ஆடியோ கால் என பல வசதிகளை பயன்படுத்தி வந்தார்கள் மக்கள்.
இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலிகள் ஹேக்கர் ஊடுருவி அடிக்கடி ஏதாவது செய்து வருகிறார்கள். அதனால் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி அடிக்கடி அப்டேட்களை வெளியீட்டு பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் திடீரென உலகில் பல இடங்களில் வாட்ஸ்அப் செயலி முடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் பலரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த செயலி 19/3/2021 இரவு நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் செயலி நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
பல பொதுமக்கள் வாட்ஸ்அப் இயங்கவில்லை என புகார் அளித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தும் மிகப்பெரிய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ஏனென்றால் ஏதாவது ஹேக் செய்து விட்டார்களா என அச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து எந்த ஒரு தகவலும் அந்த நிறுவனம் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்கள். அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது.