தொகுப்பாளினி பிரியங்காவிற்கு என்னதான் ஆச்சு.! அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிப்பு

பொதுவாக சினிமாவில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் வெள்ளித் திரை நடிகைகளுக்கு எப்படி தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவுள்ளதோ அதே அளவிற்கு தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகிறது.  தொகுப்பாளர்களாக பணியாற்றிய பலர் தற்பொழுது வெள்ளித் திரையிலும் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் நீண்ட காலங்களாக பணியாற்றி வருகிறார்கள்.  அந்த வகையில் பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.

பிரியங்கா ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் எனென்றால் இவரை மற்றவர்கள் எவ்வளவு கலாயித்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே மீண்டும் அவர்களை கலாய்ப்பார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் மாகாபாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.  இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவர் சமீபத்தில் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் ஸ்டைலிஷாக நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் பிரியங்கா முதலில் சுட்டி டிவி மூலம் தான் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரோடு ரமேஷ் உடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் படிப்படியாக தனது பேச்சுத் திறமையை வளர்த்துக்கொண்டு தற்பொழுது சின்னத்திரையில்  கலக்கி வருகிறார்.

இந்நிலையில் பிரியங்காவிற்கு திடீரென்று உடல் நலம் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.பிரியங்கா இவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இதோ அந்த வீடியோ.