பட வாய்ப்பு கிடைத்து என்ன பிரயோஜனம்..? வளர முடியாமல் தவிக்கும் ப்ரியா பவானி சங்கர்..!

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

சினிமா உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக நடிகர் நடிகைகள் வேறு ஏதாவது ஒரு வேலையை செய்திருப்பார்கள் அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து பின் ஸ்டார் விஜய் டெலிவிஷனில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டுதான் சினிமா உலகில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த மான்ஸ்டர், மாஃபியா, கடை குட்டி சிங்கம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு பிரபலமும் அடைந்தார்.

தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. ஏன் 2022 ல் கூட எட்டு ஒன்பது படங்கள் கைவசம் இருந்தன. அதில் சில படங்கள் வெளிவந்துள்ளன இருப்பினும் கையில் அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 போன்ற படங்கள் இருக்கின்றன இப்படி சினிமா உலகில் பட வாய்ப்பை கைப்பற்றி என்ன பிரயோஜனம் சினிமாவில் இன்னும் எதிர்பார்க்க அளவிற்கு வளர முடியவில்லை என நினைத்து புலம்பி கொண்டிருக்கிறாராம்..

திரை உலகில் நான்கைந்து படங்களில் நடித்து விட்டாலே நடிகைகள் சம்பளத்தை ஏற்றுவது வழக்கம் ஆனால் பிரியா பவானி சங்கர் சம்பளத்தை ஏற்ற முடியாமல் தவித்து வருகிறார் காரணம் இவர் தொடர்ந்து சினிமா உலகில் ஹீரோயினாக நடிப்பதோடு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிப்பதால் தற்பொழுது அவருக்கு இரண்டும் கலந்து வாய்ப்புகள் வருகிறதாம் அதனால் சம்பளத்தை உயர்த்தினால் உங்களுக்கு அவ்வளவு எல்லாம் சம்பளம் தர முடியாது என தயாரிப்பாளர்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மீறி கேட்டால் வேற நடிகையை பார்த்துக்கொள்கிறோம் என சொல்லுவதால் வேறு வழி இல்லாமல் வந்ததை விட்டு விடக்கூடாது எனக் கூறி கம்மியான சம்பளத்திற்கு நடிக்கிறாராம். மேலும் அதிகமாக குணச்சித்திர மற்றும் சின்ன சின்ன கேரக்டர்கள் தான் அதிகம் வருவதாகவும் கூறி புலம்பி கொண்டிருக்கிறாராம்.