சாண்டி மாஸ்டர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் இவரது இயற்பெயர் சந்தோஷ் குமார். இவர் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்த வர். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பாடலுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காஜல் பசுபதி என்கின்ற நடிகை மற்றும் தொகுப்பாளராக பணிபுரிந்த வரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு சில்வியா என்கின்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு லாலா என்ற பெண் பெண்குழந்தையும் உள்ளது. இவர் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் இரண்டாம் இடத்தை வென்றார். இவர் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் நகைச்சுவை குணம் மிக்கவர். இவரே பாடல் எழுதி நடனம் ஆடுவதில் வல்லவர்.
கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் பல பிரபலங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல சாண்டியும் தனது மகள் லாலாவுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி சமூக வலைதலளத்தில் வெளியிட்டு உள்ளனர். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.