டீம்ல எது நடந்தாலும் இனி இவரை கேப்டனாக மட்டும் விளையாட வைக்க மாட்டோம். சிஎஸ்கே உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

csk
csk

ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய நிலையில் இதுவரை 15 சீசன்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த 15 சீசன்களில் ஐபிஎல் அதிக முறை பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று இருக்கிறது.

இதை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். 40 வயதான தோனி இன்னும் சில ஆண்டுகளில் ஐபிஎல் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யார் இருப்பார் என்று பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் மினி ஏலத்தில் கேன் வில்லியம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி இருக்கிறது.

அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு தொடங்க உள்ள ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தை பற்றி தற்போதே பேச்சு அடிபட்டு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக பிசிசிஐ உறுதியாக கூறி இருக்கிறது.

இதனால் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலையும் தக்க வைத்துக் கொள்ளாத வீரர்களின் பட்டியலையும் அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் புது வீரர்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டனர் மேலும் தங்களுடைய அணியில் இருந்து சில வீரர்களை வெளியேற்றி இருக்கின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து தோனி ஓய்வு பெற்றால் அந்த கேப்டன் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது இதற்கு பதில் அளித்த சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறுகையில் அனைவருக்கும் நன்கு தெரியும் தோனி தலைமையிலான அணி சிறப்பாக விளையாடும் என்று அவராலும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு அறிவித்திருந்தாலும் இன்னும் இந்திய அணியின் சொத்தாக தான் இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு மீண்டும் தோனி இருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அதனை பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சயம் அதற்கு ஏற்பார் போல முடிவு எடுத்து விடுவோம். ஆனால் தற்பொழுது தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார் ஒருவேளை உறுதியான தகவல் பிசிசிஐ இடம் இருந்து வெளியேறினால் நிச்சயம் தோனி எங்களிடம் ஆலோசனை நடத்துவார் என்று  கூறியுள்ளனர். மேலும் இதுவரை ரவீந்திர ஜடஜாவை எதிர்கால கேப்டன் பதவி திட்டத்திலும் இல்லை என்று  கூறப்படுகிறது.