தமிழ் சினிமா உலகில் அஜித் தொடர்ந்து பல்வேறு வெற்றி / தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். காரணம் அவரது ரசிகர்கள் சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக ரஅவரை பார்க்கின்றனர்.
அஜித்தும் அதற்கு நான் சும்மா சொல்லக்கூடாது சமீபகாலமாக சிறந்த இயக்குனரிடமும் நன்கு கதையை கேட்டு நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வலிமை திரைப்படமும் வெளியானது இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்கி வருகிறது.
சொல்லப்போனால் இதுவரை 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்து ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், வலிமை திரைப்படத்தை விமர்சனம் என்ற பெயரில் ப்ளூசட்டை மாறன் தரம் தாழ்ந்து பேசி அஜித் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்தார் இதனை அடுத்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரை தாறுமாறாக விமர்சித்தனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரும், நடிகருமான ஆரி பேட்டி ஒன்றில் இதுகுறித்து சொன்னது : ப்ளூ சட்டை மாறன் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் அது உங்களுக்கு திருப்பி வரும் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தும், உழைப்பால் உயர்ந்தவர் தான் நறுக்குன்னு பேசியுள்ளார். இச்செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.