இந்திய அணியை ஐக்கிய அரபு எமிரேட்டில் 20 ஓவர் உலக கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றாலும், கடைசி இரண்டு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறது.
இருப்பினும் இந்திய அணி அரையிறுதி போட்டியில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்றால் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி தோற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிடிக்க முடியும். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்திய அணியின் இன்னும் இருக்கின்ற ஒரு போட்டியில் அதிக அளவு ரன் வித்தியாசத்தில் ஜெயித்தால் நல்ல ரன் ரேட் கிடைத்தால் நியூசிலாந்து தோல்வியுறும் பட்சத்தில் ரன் ரெட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பிடிக்கும்.
இந்திய அணி அடுத்ததாக நமீபியா அணியுடன் மோத இருக்கிறது இந்த போட்டியிலும் எடுத்தவுடனேயே தனது ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி ரெடியாக இருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி ஸ்காட்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ஸ்காட்லாந்து அணி களத்தில் இறங்கியது முதல் ஓவரை சிறப்பாக விளையாடிய ஸ்காட்லாந்து அணி நல்ல ஸ்கோரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இதனையடுத்து தொடக்க வீரர்களாக இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்.
எடுத்த உடனேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர்கள் அசத்தினர் கேஎல் ராகுல் குறைந்த பந்தில் 50 ரன்களும் ரோகித் சர்மா 30 ரன்களும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி வெறும் 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்து அசத்தியது இந்த வெற்றியின் மூலம் ரன் ரேட் ஏறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதை அடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து பேசியுள்ளார்.
— pant shirt fc (@pant_fc) November 5, 2021
இந்த தொடரில் நீங்கள் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ரவீந்திர ஜடேஜா. நாங்கள் உடனடியாக பெட்டி படுக்கைகளை கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி விடுவோம் என சிரித்தபடி கூறினார்.