பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ஷாருக்கான் இவர் தற்போது இயக்குனர் அட்லி உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு வெளியாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஷாருக்கானுக்கும் அட்லிக்கும் சில பிரச்சனையின் காரணமாக அட்லீ அவர்கள் ஜவான் படத்தை விட்டு விட்டு சென்னைக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்து வரும் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றுவரும் நிலையில் பல சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் உடன் கேளுங்கள் என்ற தலைப்பில்லான ட்விட்டர் வழியே ரசிகர்களுடன் உரையாடும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. ஷாருக்கான் இடம் பல ரசிகர்கள் பல்வேறு கேள்வி எழுப்பிய நிலையில் ஒரு ரசிகர் காதலர் தினத்தில் கௌரி மேடத்திற்கு நீங்கள் வழங்கிய முதல் பரிசு என்ன என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த ஷாருக்கான் பொறுமையாக நின்னு யோசித்து பதில் அளித்துள்ளார் அதாவது தங்களுக்கு திருமணமாகி 34 ஆண்டுகள் ஆகிறது நான் முதலில் அவரை காதலிக்கும் போது முதல் பரிசாக ஒரு ஜோடி பிளாஸ்டிக் காதணியை பரிசாக கொடுத்து உள்ளேன் என்று பதிலளித்துள்ளார்.
ஷாருக்கான் மற்றும் கௌரி இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இவர் முதலில் வாங்கி கொடுத்த பரிசை இன்னமும் ஞாபகம் வைத்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.