சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக நடிகைகள் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவார்கள் ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய அழகு குறைந்து விடுமோ இதனால் திரைப்படங்களின் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற எண்ணத்தில் வயதானாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தன்னுடைய இருந்த சக நடிகர்களுக்கு திருமணமாகியும் தற்போது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருபவர்தான் நடிகர் விஷால். இவருக்கு 42 வயதை கடந்துள்ள நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் மேலும் இவருடைய ஜாதகத்தில் தோஷங்கள் இருப்பதாகவும் அதனால் அடிக்கடி கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் நடிகர் விஷால் சரத்குமார் மகள் வரலட்சுமி காதலித்து வந்தார் பிறகு இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டார்கள். மேலும் பிரபல தொழிலதிபர் மகள் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திருமணமும் நின்றுவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஷால் இடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால் நடிகர் சங்க கட்டடம் வேலை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இன்று குழந்தைகள் தினம் என்பதால் அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடியுள்ளார்.
மேலும் அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டி விட்டும் பரிசுகளை வழங்கியும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். இவ்வாறு அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.