விஜய் சொன்னது இன்று வரையிலும் நடக்கவே இல்லை – வருத்தப்படும் சரண்யா பொன்வண்ணன்.!

saranya-ponnvanan
saranya-ponnvanan

சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதலில் கமலஹாசன் உடன் கைகோர்த்து நாயகன் என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து படங்களில் ஹீரோயின்னாக நடித்து ஓடிக் கொண்டிருந்த இவர் 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் சில காலம் சினிமா பக்கமே தலை காட்டாத இவர் மீண்டும் 2003 ஆம் ஆண்டு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த தடவை இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை பதிலாக ஹீரோக்களின் படங்களில் அம்மா சித்தி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களே கிடைத்தன. அதிலேயும் தனது திறமையை வெளிக்காட்டி பிரபலமடைந்தார்.

சரண்யா பொன்வண்ணன் அஜித், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் ஆனால் இதுவரை விஜய் உடன் மட்டும் அவர் சேர்ந்து நடித்ததே இல்லை குருவி படத்தில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் விஜய்க்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்  நடிக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் சரண்யா பொன்வண்ணன் விருமன் படத்தில் நடித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது சரண்யா பொன்வண்ணன்  இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக ஏன் விஜய் உடன் இதுவரை நடிக்கவில்லை எனவும் கேட்டுள்ளனர் அதற்கு சரண்யா பொன்வண்ணன் பதிலளித்தது.

விஜயுடன் அமையாதது குறித்து நான் வருத்தப்படவில்லை ஏன் அமையவில்லை என்று தான் தோன்றும். உலகம் சிறியது நிச்சயம் நாங்கள் இருவரும் இணைவோம் ஒரு நல்ல படத்திற்காக நாங்கள் இருவரும் காத்துக் கொண்டு இருக்கிறோம் என நம்புகிறேன் என கூறினார். விஜயை நான் பார்க்கும் பொழுது எல்லாம் அவர் சொல்லுவார் நம்ம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ணனும்னு சொல்வாரு.. நானும் ஆமா ஆமா என்று சொல்லுவேன். ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை என கூறினார்.