காமெடி ஜம்பவன் விவேக் இன்று அதிகாலையில் காலமானார் அவருக்கு தற்போது வயது 59. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று 4:35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விவேக் தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக வலம் வந்தவர் இவர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாக நடித்து உள்ளார். கடந்த சில தினங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் நேற்று திடீரென உடல்நிலை மோசமாக சென்று நிலையில் சிம்ஸ் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.
அப்பொழுது அவருக்கு மருத்துவ உதவி செய்து வந்தார்கள் சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் சிவசாமி அவர்கள் பேட்டியில் கூறியதாவது. நேற்று காலை 11 மணி அளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு நடிகர் விவேக் கொண்டுவரப்பட்டார் கொண்டு வரும் பொழுது அவருக்கு நாடித்துடிப்பை கிடையாது உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டன.
அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது இதயத்திற்கு செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்தால் அதை கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம் எக்மோ செய்த பிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது அவரின் உடல் நிலை பாதிப்பு தீவிரமாக இருந்ததால் உயிரிழப்பு நேர்ந்துள்ளது பல விதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் முயற்சிகள் அனைத்தும் வீணாகி போனது.
இவருக்கு இந்த உடல்நிலை பிரச்சினை ஒரு நாளில் வந்திருக்க முடியாது இரத்தக் கொதிப்பிற்கு அவசர சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததாக அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.