இளைய தளபதி விஜய் சென்ற வருடம் நடித்த பிகில் திரைப்படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு மாலையில் வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து ட்ரென்டிங் ஆனதை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஆயிரம் திரையரங்குகளில் குறையாமல் வெளியாக உள்ளது என தகவல் சமீபத்தில் வந்திருந்தது.
மேலும் இன்று படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ள நிலையில் மற்றொரு விஷயம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விஷயம் என்னவென்றால் இன்று காலை தளபதி விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரிடம் 100% இரு கைகளுடன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளாராம்.
அதை வைத்து தற்போது ட்விட்டரில் எடப்பாடி காலில் விழுந்த விஜய் என இளைய தளபதி விஜய்யை இழிவுபடுத்தும் வகையில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறதாம் இதனால் உச்சகட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.