முழு படத்தையும் ஜெயிலிலேயே வைத்து எடுத்த லோகேஷ் கனகராஜ்.! விக்ரம் படத்தின் கதை எதை நோக்கி நகர்கிறது தெரியுமா.?

KAMALAHASAN
KAMALAHASAN

உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீப காலமாக கமல் சின்னத்திரை பிக் பாஸ் நிகழ்ச்சி, அரசியல், தொழில் நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் பிஸியாக இருந்து வருவதால் திரைப்படங்களில் அதிகம் கமிட் ஆகாமல் இருந்தார்.

அப்படி இரண்டு வருடங்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த விக்ரம் திரைப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து உள்ள நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அப்படி இந்த படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஜெயிலில் உள்ளாராம் அவரை வெளியில் கொண்டுவருவதற்காக பகத் பாசில் சில முயற்சிகளை செய்து வருகிறார் அப்படி செய்து வரும்போது சில குற்றங்களை செய்து பகத் பாசில் ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இருவரும் போடும் திட்டங்களையும் முறியடிப்பதற்காக கமல் ஜெயிலுக்கு செல்கிறாராம் .

இப்படி படத்தில் முக்கால்வாசி காட்சிகள் ஜெயிலில் தான் இடம் பெறுகின்றன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன அதையும் இயக்குனர் லோகேஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பார்த்து பார்த்து ஆக்ஷன் காட்சிகளை எடுத்துள்ளாராம்.

ஏனென்றால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு பிறகு இந்த விக்ரம் திரைப்படம் உருவாகி உள்ளதால் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து இயக்குனர் இந்த படத்தை எடுத்து வருகிறாராம்.