தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகம் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
கொஞ்ச கொஞ்சமாக தனது திரைப்படங்களில் நகைச்சுவையுடன் சேர்ந்த ஆக்சன் காட்சிகளை வைத்து பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்கள் இயக்கியிருந்தார். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
டான் திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படமும் வெற்றி அடையுமா என்று எண்ணியிருந்தார் ஆனால் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் ஷோவை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி அவர்கள் வந்திருந்தார்கள்.
தன்னுடைய படம் வெளியாகும் போது தனது மனைவிக்கு புதுசாக புடவை வாங்கி தருவது ஆடைகள் வாங்கி தருவது எனது வழக்கமாக வைத்துள்ளார் அதேபோல இந்த முறையும் பிரின்ஸ் திரைப்படம் பார்க்கும்போது சிவகார்த்திகேயன் வாங்கி கொடுத்திருந்த உடையில் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் தனது மனைவிக்கு ஆடைகளை வாங்கி தருவதை செண்டிமெண்டாக வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த முறையும் அதை விடாமல் அப்படியே கடைப்பிடித்து வருகிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.