தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பூர்ணா இவ்வாறு பிரபலமான நடிகை கேரளாவைச் சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவரை அனைவரும் குட்டி அசின் என்று அழைப்பது உண்டு.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் ஆனால் அதற்கு முன்பாகவே பல்வேறு மலையாளத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத் திரைப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில் நமது நடிகை தமிழ் சினிமாவில் கந்தக்கோட்டை ஆடுபுலி, ஜன்னலோரம், தகராறு, மணல்கயிறு, கொடிவீரன் சவரக்கத்தி காப்பான் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார் ஆனால் இவருக்கு திடீரென பட வாய்ப்பு இல்லாமல் போனது மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்கள் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
இதனை தொடர்ந்து நமது நடிகை பல்வேறு நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றியது மட்டுமில்லாமல் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்று வந்தார் அப்பொழுது நடிகை பூர்ணா பேசிக்கொண்டிருக்கும்போது போட்டியாளர் ஒருவர் அவருடைய தோளில் கை வைத்து பேசினார்.
இதனைப் பார்த்த பூர்ணா திடீரென எதிர்பாராத விதமாக கையை வைத்தவுடன் உதறிவிட்டு இதெல்லாம் என்ன..? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்..? எப்படி என்னை தொடரலாம்..? என கோபமாக பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கி விட்டாராம். இவ்வாறு வெளிவந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இதற்கு முன்பாக ஒரு எபிசோடில் நடிகை பூர்ணா நன்றாக நடனம் ஆடிய ஒருவருக்கு முத்தம் கொடுத்திருப்பார் அதுமட்டுமில்லாமல் அவருடைய கன்னத்தையும் கடித்துள்ளார் இதெல்லாம் ஒரு நடுவர் செய்யும் வேலையா என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நான் என் அம்மாவின் கன்னத்தை கடித்து உள்ளேன் அதே போல பல்வேறு குழந்தைகளின் கன்னத்தையும் கடித்துள்ளேன்.
அந்த வகையில் இந்த போட்டியாளர் எனக்கு ஒரு குழந்தை போல என்று பூர்ணா கூறியது மட்டுமில்லாமல் இது சரியா தவறா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் நான் முத்தமிடுவது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது என்று கூறியுள்ளார்.