தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க இருப்பதாக தகவல் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னது தான் நடக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது டிசம்பரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 முழுக்க முழுக்க என்னுடைய பாணியில் தான் இருக்கும் என்று கூறியிருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி திரைப்படமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தான் அதிக ஸ்கோர் பெற்று முழு கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்து விட்டார். மாஸ்டர் படத்தில் நடித்த ஒரு வில்லனையே சமாளிக்க முடியாத விஜய் தளபதி 67 திரைப்படத்தில் வில்லன்களாக நிறைய பேர் நடிக்க இருக்கிறார்கள் ஆகையால் நடிகர் விஜய் எப்படி அவர்களெல்லாம் சமாளிக்க போகிறார் என்ற தயக்கம் தளபதி ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.
ஆனால் இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் அதைப் பற்றி எதுவும் கவலைப்படாதீர்கள் என்று பல ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படம் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும் திரைப்படமாக விஜய்க்கு இதுவரைக்கும் அமையாத ஒரு திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.