தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இருந்தாலும் படம் எதிர்பார்க்காத அளவு வசூல் நடத்தியது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் தனது 66வது படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் அதிக அளவு பொருட்செலவில் தில் ராஜூ தயாரித்து வருகிறார். படத்தில் விஜயுடன் இணைந்து சரத்குமார், பிரபு, ஷாம், குஷ்பு போன்ற பலரும் நடித்து வருகின்றனர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா விஜயின் தீவிர ரசிகை அதனால் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படத்திலிருந்து அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.
இதனால் படக்குழுவும் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர் இந்த நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அவர் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி தளபதி 66 படத்தில் ராஷ்மிகா சுயநலமிக்க தலை கனத்துடன் கூடிய பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நடித்து வருகிறார் என்பது தெரிய வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா பல படங்களை கைவசம் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.