இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2, இரும்பு கை மாயாவி, விக்ரம் 2 ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த படங்களுக்கு முன்பாக விஜயை வைத்து தளபதி 67 என்னும் படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் விஜய்யும் லோகேஷும் இரண்டாவது முறையாக இணைய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயும் லோகேஷும் இதற்கு முன்பாக மாஸ்டர் படத்தில் பணியாற்றினர்.
அந்த படம் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 67 படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக்கி வருகிறதாம் லோகேஷ் கனகராஜ் தற்போது கதையை எழுதி வருகிறார் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மொத்தம் ஆறு நடிகர்கள் நடிக்க இருகின்றனர்.
அதே சமயம் இந்த படத்தில் திரிஷா சமந்தாவும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகை திரிஷா விஜய் உடன் இதுவரை கைகோர்த்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் நடித்துள்ளார் இந்த படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக விஜயும் திரிஷாவும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்த படத்தில் திரிஷாவுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்தும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது தளபதி 67 படத்தில் நடிகை திரிஷாவை விஜய் மனைவியாக நடிக்க வைக்க பட குழு திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.