தளபதி விஜய் அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்து அவர்களது படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் அட்லீ உடன் மெர்சல், பிகில், தெறி லோகேஷ் உடன் மாஸ்டர், நெல்சன் உடன் பீஸ்ட் என தொடர்ந்து தமிழ் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த விஜய்.
தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கை கொடுத்து வம்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் மிக ஸ்மார்ட்டாகவும் குடும்ப கதையிலும் நடித்து வருகிறார் என படத்திலிருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
அண்மையில் கூட எஸ் ஜே சூர்யாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வாரிசு படத்தின் ஷூட்டிங் வீடியோக்கள் சில சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகின்றார். அவர் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என கூறியிருந்ததால் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன மேலும் படத்தில் இருந்து சில அப்டேட்களும் அவ்வப்பொழுது வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அப்படி வாரிசு படம் குறித்து தற்போதும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால் இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் விஜய் ராஜேந்திரன் எனவும் அவர் அப்ளிகேஷன் டிசைனராக இந்த படத்தில் நடித்து வருகிறாராம் எதுவும் சில தகவல்கள் வெளியாகி தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.