தனது சிகிச்சைக்காக உதவி செய்த செவிலியர்களுடன் விஜயகாந்த் என்ன செய்கிறார் பாத்தீங்களா.!

vijayakanth
vijayakanth

தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற பெயரோடு அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் தான் விஜயகாந்த் இவரது திரைப்படங்கள் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் இவரது திரைப்படங்களில் மிகவும் மக்களை கவரும் வகையில் நல்ல நல்ல வசனங்களையும் நல்ல கருத்துக்களையும் கூறியிருப்பார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது.விஜயகாந்த் பார்ப்பதற்கு எளிமையானவராக இருப்பவர் இருந்தாலும் இவரது திரைப்படங்களில் மக்களுக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து நடித்து வருவார். இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த நடிகர் விஜயகாந்த் .

ஒரு சமயத்தில் அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபட்டார் இவரது அரசியல் வாழ்க்கை ஒருபக்கம் இருந்தாலும் இவரது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது உடல்நிலை சரி இல்லாமலே கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது.

இதற்கு பயந்து கொண்டே இவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை தனது உடல் நிலை இப்படி இருக்கும் நிலைமையில் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் அதேபோல் சமீபத்தில் விஜயகாந்த் தனது சிகிச்சைக்காக திடீரென அமெரிக்கா சென்று இருந்திருக்கிறார்.

அங்கு தனது சிகிச்சைக்காக உதவி செய்த செவிலியர்கள் உடன் இவர் நடித்த சத்ரியன் திரைப்படத்தை பார்த்துள்ளார் இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன் நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவி புரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தபோது எடுத்த படம் என பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது உடல் நிலைக்கு ஒன்றும் வராது நீங்கள் மீண்டும் சினிமாவில் எப்பொழுது நடிக்க வருவீங்க என இவரை தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.