தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இதுவரைக்கும் இவருடைய இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை எந்த ஒரு முன்னணி நடிகராலும் பெறமுடியவில்லை அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். மேலும் நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திலிருந்து டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சமீப காலங்களாக நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் சரிவர ஓடவில்லை ஆகையால் ஜெயிலர் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்கள் நடிகர் ரஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்துள்ளனர் இந்த நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தை மறுபடியும் ரீ ரீலீஸ் செய்துள்ளனர். ஏற்கனவே பாபா படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது இந்த நிலையில் ரீ ரிலீசில் பட்டைய கிளப்பும் என எண்ணி இருந்த ரஜினிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
ஆரம்பத்தில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் இளைஞர்கள் இந்த படத்தை பார்க்க மழைக்காக கூட தியேட்டர் பக்கம் ஒதுங்கியது இல்லை என்று பல விமர்சகர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பாபா திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் பாபா திரைப்படம் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சிலர்களை தவிர பல இளைஞர்கள் பாபா திரைப்படத்தை நிராகரித்து விட்டார்கள். இதனால் ரஜினியின் தனிப்பட்ட நம்பிக்கையும் அறிவுரைகளும் ரசிகர்களிடம் செல்லுபடியாகவில்லை. அதுமட்டுமல்லாமல் காலாவதியான இந்த திரைப்படத்தை ரஜினி எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் மறுபடியும் தோல்வி அடைந்து இருக்கிறது என்று ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசியுள்ளார். இவருடைய இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.