சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த மணிரத்தினத்திற்கு கனவு படமாக இருந்தது பொன்னியின் செல்வன் இந்த படத்தை எடுக்க அவர் மூன்று தடவை முயற்சி செய்துள்ளதாகவும் ஆனால் நான்காவது தடையாகத்தான் அது நிறைவேறி உள்ளது என கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தற்பொழுது அவர் இயக்கி உள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் எங்கும் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராஜ் மற்றும் பல நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.
படம் வெளி வருவதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க பொன்னின் செல்வன் படகுழு தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை வெளியிட்டது மேலும் இந்த டீசரின் பொழுது பல்வேறு பிரபலங்கள் இந்த படம் குறித்து பேசி..
படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க வைத்துள்ளனர் தற்பொழுது இந்த டீசர் youtube இல் வெளியாகி மிகப்பெரிய ஒரு சாதனை புரிந்து வருகிறது அந்த அளவிற்கு இந்த டீசரில் பல விஷயங்களை பொன்னியின் செல்வன் படம் கூறி உள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகியுள்ளது ஆனால் எவ்வளவு பட்ஜெட் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் அதற்கான தகவலும் கிடைத்துள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம் சுமார் 200 கோடிக்கு மேல்லான பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.