தற்போது பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் தமிழர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் பலர் பிரபலமடைந்து உள்ளார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் அஸ்வின். இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் சொல்லும் அளவிற்கு கை கொடுக்காத காரணத்தினால் தற்போது நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடையலாம் என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சில சீரியல்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் குத்வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகிலாவும் பங்கு பெற்று வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இவருடைய மகள் அஸ்வினுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இன்னொரு தாயிலிருந்து கிடைத்த கூட பிறக்காத சகோதரர் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.