இந்த வயதிலேயும் விஜய் செம்ம பிட்டாக என்ன காரணம்.? பதில் அளிந்த தளபதி அம்மா

vijay
vijay

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த  பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுக்க தோல்வியை காணாத இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் படத்தின் மூன்றாவது கட்டப்பட பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

வெகுவிரைவில் படப்பிடிப்பை முடித்து இந்த வருடம் இறுதியில் படம் வெளி வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் பல தகவல்கள் வெளி வருகின்றன அதன்படி விஜயின் அம்மா விஜய் பற்றி பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளர் விஜய் அம்மாவிடம் உங்களது மகன் விஜய் இந்த வயதிலேயும் பிட்டாக இருக்க என்ன ரகசியம் என கேட்டனர் இதற்கு பதில் அளித்த அவர் விஜய் காலையில் இரண்டு தோசை இரவில் இரண்டு தோசை சாப்பிடுவார். ஜிம்மியில் நல்ல உடற்பயிற்சி செய்வார் என கூறி உள்ளார் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் இந்த செய்தியை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.