ரஜினியின் படத்தை போட்டிபோட்டுக்கொண்டு தியேட்டர் உரிமையாளர்கள் வாங்க காரணம் என்ன.! வெளிவரும் உண்மை தகவல்.

திரை உலகில் ஒருவர் பல ஹிட் படங்களை கொடுத்து விட்டால் அவர் நம்பர் ஒன் நடிகர் சொல்லிவிட முடியாது.

காரணம் சினிமாவையும் தாண்டி நிஜத்திலும் ஒருவர் சிறந்த மனிதராக இருந்தால் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அப்படித்தான் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதோடு இன்றும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.

சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ஒருசில காலகட்டத்தில் படு தோல்விப் படங்களையும் கொடுத்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அந்த வகையில் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வி படமாக பார்க்கப்படுவது பாபா திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியானது அவருடன் இணைந்து மனிஷா கொய்ராலா, சுரேஷ் கிருஷ்ணா, கவுண்டமணி, விஜயகுமார் போன்ற பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த படத்தின் கதை திரைக்கதை அனைத்தையும் ரஜினியே எழுதியிருந்தார்.

படம் தோல்வியடைந்ததை உணர்ந்து கொண்ட ரஜினிகாந்த் இரவோடு இரவாக பாபா படத்தை யாரெல்லாம் வாங்கினார்களோ அந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் யார் என்பதை இரவோடு இரவாக கண்டுபிடித்து மொத்த பணத்தையும் செட்டில் செய்தாராம்.

அதன்பின்னே நிம்மதியாக தூங்கினாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரை உலகில் தற்போது ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டால் தான் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்று நினைத்து ஆட்டம் போடும் நடிகர்கள் மத்தியில் சைலண்டாக இருந்து கொண்டு வலம் வருகிறார் ரஜினிகாந்த் இதனாலே அவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

rajini
rajini

அதன் பிறகு ரஜினி படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களும் வாங்க ஆரம்பிதனர்.