தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருப்பவர் இயக்குனர் ராஜமௌலி இவர் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களையும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்திருந்தார் அதைவிட பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது அந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது RRR என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் ஆகியவர்கள் இணைந்து நடித்து உள்ளனர் மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியாக இருக்கிறது.
தற்போது படக்குழு போஸ்ட் பிரமோஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் உயிரே பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜமவுலி இரண்டு இடத்தில் நான் முக்கியமாக தவறு செய்து உள்ளேன் அதற்கு மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன் என ஆரம்பத்திலேயே கேட்டுள்ளார்.
அவர் கூறியது : முதலில் எனக்கு தமிழ் சரியாக பேச வராது அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கடந்த 4, 3 வருடங்களாக எந்த ஒரு பிரஸ்மீட்டில் வைக்காமல் எனக்கு தெரிந்த பதில்களை உங்களுக்கு நான் சொல்லி வருகிறேன் முதலில் அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திரைப்படத்தில் வரும் உயிரே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதன் கார்க்கி சிறப்பான இசையை அமைத்துக் கொடுத்துள்ளார் வரிகள் ஒவ்வொன்றும் துள்ளாட்டம் போட வைத்துள்ளது இந்த பாட்டை ரசித்து வரிகளை போட்டு உள்ளார். இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்தார்க்கு எனக்கு பெருமிதம்.