தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் தமிழ் சினிமா இயக்குனர்களையும் தாண்டி பிறமொழி இயக்குனர்களின் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் அந்த வகையில் விஜய், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் கைகோர்த்து நடித்த வாத்தி திரைப்படம்..
பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது இந்த படம் வெளியான அதே தேதியில் தான் அவரது அண்ணன் செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் திரைப்படமும் வெளிவந்தது ஆனால் வாத்தி முழுக்க முழுக்க தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் மீது நடக்கும் மோசடிகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது.
அதனால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பாக தமிழை தாண்டி தெலுங்கில் இந்த படத்தின் வரவேற்பு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வசூலும் நன்றாகவே அள்ளியது. இதுவரை மட்டுமே வாத்தி திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக தகவல்கள் வெளிவந்தன இதனை அடுத்து.
இந்த படத்தின் வசூல் நிச்சயம் நூறு கோடியை தொடும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் வாத்தி படக்குழு சக்சஸ் பார்ட்டி ஒன்றை வைத்து கொண்டாடியது அதில் தனுஷ், இயக்குனர் மற்றும் திரை பிரபல பட்டாளங்கள் பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டு தீ போல உயிரளானது.
இந்த வெற்றி விழாவில் பேசிய வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இதுவரை மட்டும் உலக அளவில் 75 கோடி வசூல் செய்துள்ளது விரைவில் 100 கோடி கிளப்பில் இந்த திரைப்படம் இணையும் என சந்தோஷத்துடன் கூறி உள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.