Rajini : திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் தனது மார்க்கெட்டை கீழே விடாமல் இருக்க வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். தற்பொழுது கூட நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்து உள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரஜினி இதில் ஜெயில் வார்டனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது அவருடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்துள்ளனர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதற்கு முன்பாக ஜெயிலர் படத்திலிருந்து பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது கடைசியாக காவாலா, ஹுக்கும் பாடல்கள் வெளிவந்து வைரல் ஆகின அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் ரஜினி ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் ரஜினி நடித்த திரைப்படம் குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி படம் வெளிவந்து இத்துடன் ஏழு வருடங்களை நிறைவு செய்கிறது இதனை முன்னிட்டு இந்த படத்தின் வசூல் குறித்து ஒரு தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த கபாலி திரைப்படத்தின் வசூல் இதோ..
தமிழ்நாடு – 76 கோடி, Ap/ tg – 36.5 கோடி, கர்நாடகா – 37 கோடி, கேரளா – 16.1 கோடி, ரெஸ்ட் ஆப் இந்தியா – 42 கோடி, ஓவர் சீசன் – 105 கோடி. ஒட்டு மொத்தமாக கபாலி திரைப்படம் சுமார் – 312 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..