Cook with komali : மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய டிவி தொலைக்காட்சிகள் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக விஜய் டிவி பல காமெடி நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து ரக்ஷன் தொகுத்து வழங்கி வர செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஜட்ஜ் ஆக இருந்து வருகின்றனர். இதன் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதுவும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
சென்ற வாரம் தான் நான்காவது சீசனில் செலிப்ரேஷன் ரவுண்டு நடைபெற்றது. இதில் இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 போட்டியாளர்களான ரித்திகா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா போன்ற சிலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் சேர்ந்து கோமாளிகளான சரத், குரேஷி, புகழ், தீனா போன்ற பலரும் சேர்ந்து என்டர்டைன்மென்ட் செய்தனர்.
மேலும் இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய் பங்கு பெற்றார். இந்த வாரம் இதன் ஃபைனல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. அதற்கு முன்பே இந்த சீசனின் முதல் மூன்று இடத்தை பிடித்த வெற்றியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீசன் முழுவந்தும் சூப்பராக சமைத்து ஜட்ஜிடம் பல பாராட்டுகளைப் பெற்ற மைம் கோபி தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார்.
நடிகர் மைம் கோபிக்கு டைட்டில் வின்னர் என்ற பட்டத்துடன் சேர்த்து 10 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி பிடித்துள்ளார். இவருக்கும் ஐந்து லட்சம் பரிசு தொகையை கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சீசனின் மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்திருக்கிறார்.