தமிழ் சினிமாவில் வசூல் கிங்காக இருப்பவர் தளபதி விஜய் இவர் தற்போது தனது 66வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதிகட்ட சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், குஷ்பூ, ஜெயசுதா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்தனர். தளபதி 66 படக்குழுவும் விஜய்யை சந்தோஷப்படுத்த அடுத்தடுத்த 3 போஸ்டர்களை வெளியிட்டது.
போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சுமாராக இருக்கு.. பரவாயில்லை என கமெண்டுகளை அடிக்கத் தொடங்கினர் மேலும் இது வேறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பி என கூறினர். iஇதனால் வாரிசு படக்குழு அப்செட்டாகியது. விஜய் ஒவ்வொரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.
ஆனால் வாரிசு போஸ்டர் தற்போது ரசிகர்களுக்கும், விஜய்க்குமே சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது இந்த போஸ்டருக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளதாம் படக்குழு. விஜயையும், விஜய் ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியாததால் போது படக்குழுவே சற்று கடுப்பில் உள்ளதாம்.
செக்கச் சிவந்த வானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கிய அதே குழுத் தான். தளபதி விஜய்யின் வாரிசு படத்திற்கும் போஸ்டரை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது எப்படியோ விஜய்யின் 48 வது பிறந்த நாளில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.