நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள சாணி காயிதம் திரைப்படத்தின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் டிவீட் ஒன்றை போட்டுள்ளார். இதை வைத்து ரசிகர்கள் ஐஸ்வர்யா அவர்களிடம் வம்பு இழுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன் இவர் முதன் முதலாக ஹீரோவாக அவதாரம் எடுத்த திரைப்படம்தான் சாணிக் காயிதம் இத்திரைப்படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் அவர்களும் நடித்துள்ளார். சமீபத்தில்தான் செல்வராகவன் நடிப்பில் பீஸ்ட் திரைப்படமும் வெளியாகியது.
சானிக் காயிதம் திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா வின் ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இறுதிச்சுற்று திரைப்படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் அருண் மாதேஸ்வரன் தான் சானிக் காயிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
ஆனால் கோரோனோ ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது இந்நிலையில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து அமேசான் ப்ரைம் OTT இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது இந்த நிலையில் தனுஷ் அவர்கள் தன்னுடைய அண்ணன் நடித்த சானிக் காயிதம் திரைப்படம் வெளியாகியுள்ளதால் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Congrats to saani kaayidham team on a brutal brilliantly made revenge drama. Good job @selvaraghavan @KeerthyOfficial and all the other actors too..I’m very proud of you @ArunMatheswaran You are a visionary
— Dhanush (@dhanushkraja) May 6, 2022
சாணி காயிதம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் உடனே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் சமூக வலைதளத்தை அலசி ஆராய்ந்து உள்ளார்கள் ஆனால் திரைப்படத்தை பற்றி ஒரு பதிவும் வெளியிடாமல் இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு பதிவும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் இதற்கு முன் செல்வராகவன் புகைப்படத்தை வெளியிட்டு அத்தான் எனவும் குரு எனவும் கூறி ஒரு பதிவை ஐஸ்வர்யா வெளியிட்டு தனுஷ் அவர்களை வெறுப்பேற்றியது போல் இருந்தது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் தற்பொழுது எந்த ஒரு பதிவையும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவை வம்பு இழுத்து வருகிறார்கள்.