விக்ரம் படத்தில் நடிச்சு என்ன பிரயோஜனம்.. அடுத்தடுத்து வரும் பட வாய்ப்பால் கடுப்பாகி போயிருக்கும் ஷிவானி நாராயணன்.?

shivani narayanan
shivani narayanan

சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் தொடங்கி மாடல் அழகிகள் வரை வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து விட்டால் தனக்கான இடம் கிடைத்துவிடும் என நினைக்கின்றனர். அது உண்மைதான் ஆனால் அந்தப் படத்தில் அவருக்கான ஸ்கூப் அதிகமாக இருந்து அவரது திறமையை வெளிப்படும் பட்சத்தில் அவர் பிரபலம் அடையலாம் அப்படி இல்லை என்றால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் .

அப்படித்தான் நடிகை ஷிவானி நாராயணன்னுக்கு நடந்துள்ளது. ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தாலும் திடீரென மாடலிங் துறை பக்கம் தனது திசையைத் திரும்பியதால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் அள்ளி வீசி ரசிகர்களை வளைத்துப் போட்டார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த ஷிவானி நாராயணன்னுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரை பக்கம் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி உடன் ஒரு படம், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் கமலின் விக்ரம் படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் முதலாவதாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகியது.

இதில் விஜய்சேதுபதி மனைவியாக ஷிவானி நாராயணன் நடித்திருப்பார் சும்மா ஒரு சில சீன்களில் மட்டுமே வந்து போகிறார் தவிர மத்தபடி இவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி  அதில் தென்படவில்லை. இதனால் நடிகை ஷிவானி நாராயணன் ஏன்டா இந்த படத்தில் நடித்தோம் என்ற நிலைமைக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் குவிந்தாலும் பெரிய ஹீரோ படம் எதுவும் கிடைக்கவில்லை. மாறுதலாக கிளாமர் காட்சிகளில் நடிப்பது போன்ற படங்கள் வருவதால் தற்போது அதனை உதறித் தள்ளுகிறார். அதே சமயம் அந்த படங்களிலும் நடிக்கலாமா என பார்த்துக் கொண்டும் இருக்கிறாராம்.