மாஸ்டர் விஜய்க்கும் , தளபதி 67-ல் நடிக்கும் விஜய்க்கும், என்ன வித்தியாசம்.! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்…

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

இந்தியாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ரஷ்மிகா மந்தன்னா, பிரபு, குஷ்பூ, சரத்குமார், ஷாம், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர் குடும்ப செண்டிமெண்டாக உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது. வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய். இதை பலமுறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் கூறி வருகிறார்.

இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படம் மும்பை கேங்ஸ்டார் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், உரியடி விஜயகுமார், உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் மாஸ்டர் மற்றும் தளபதி 67 திரைப்படத்திற்கு என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு மாஸ்டர் திரைப்படம் விஜய் பாணியில் 50% லோகேஷ் கனகராஜ் பாணியில் 50%மாக உருவானது தான் மாஸ்டர்.

தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க என்னுடைய பாணியில் உருவாகிறது அதனால் யாரும் கவலைப்படாதீர்கள் படம் நல்லா வரும் என்று கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக விஜய் இணையும் திரைப்படம் தளபதி 67. இந்த திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து தளபதி படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது ஆனால் அதற்கு தன்னால் எந்த ஒரு பதிலும் அளிக்க முடியாது என்று தீவிரமாக கூறிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தளபதி 67க்காண அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறியுள்ளார்.