விஜய் டிவி தொலைக்காட்சியில் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மக்களின் மனதை கவர்ந்து ஈர்த்த நிகழ்ச்சி பிக்பாஸ் 5. மற்ற பிக் பாஸ் சீசனை விட இந்த சீசனில் சற்று வித்தியாசமாக இருந்தது.
ஏனென்றால் இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்கள் காலையில் அடித்துக்கொள்வது மாலையில் ஜாலியாக பேசிக் கொள்வதுமாக இருந்தனர். மேலும் வீட்டில் பெரிய அளவு சண்டை வந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு காமெடி, டான்ஸ் என ரகளையாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இது மாறியது.
பிக் பாஸ் சீசன் 5 ல் ராஜூ, காமெடி மற்றும் பொறுமை ஆகியவை மக்களுக்கு பிடித்து இருந்ததால் அவர் கடைசி வரை பயணித்தார். மேலும் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இப்படி என்றால் சீசன் 4 – ல் இதற்கு அப்படியே எதிர்மறையான வரும் பெருமளவு கோபப்படுவது மற்றும் நேர்மையாக பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார் ஆரி.
ஆனால் இருவருமே டைட்டில் வின்னர் என்ற பட்டத்தைப் பெற்று ஆளும் ஆரிக்கும், ராஜுவுக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் தான் வேற லெவல். பிக் பாஸ் சீசன் 4 – ல் முதல் இடத்தைப் பிடித்த ஆரி சுமார் 16 கோடியை வாக்குகளை பெற்று அசத்தினார் ஆனால் பிக் பாஸ் சீசன் 5 – ல் ராஜூ கோப்பையை கைப்பற்றினாலும் எவ்வளவு ஓட்டுகள் வாங்கியது என்பது மற்றும் பெரிய அளவு கூறப்படவில்லை.
ஆனால் ஆரி அளவுக்கு இவர் ஓட்டுகளை வாங்கி இருக்க முடியாது மட்டுமே தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. டைட்டில் வின்னர் படத்தை இருவரும் வென்றுள்ளனர் ஆனால் இருவருக்கும் இடையே இருக்கும் குணங்கள் வேற..