துணிவு படத்தில் நடித்து என்ன பிரயோஜனம்..! ஜி பி முத்துக்கு கிடைத்த ஏமாற்றம்..

ajith-gbmuthu

டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற பல செயலில் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் ஜி பி முத்து. ஒரு கட்டத்தில் youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து நல்ல காசு பார்த்து வந்த இவர் திடீரென சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்

குறிப்பாக வெள்ளி திரையில் தற்பொழுது 4, 5 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றாக இன்று வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் இவர் நடித்த மற்றொரு திரைப்படமான அஜித்தின் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக இருந்தாலும் ஜி பி முத்து போன்றவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் காமெடியும் கொஞ்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஜிபி முத்து துணிவு படத்தில் நடித்து உள்ளதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போவேன் என கூறினார். துணிவு படத்தில் அஜித்துடன் நான் நடிக்கவில்லை அவரை நான் பார்க்கவே இல்லை என ஜி பி முத்து கூறியிருக்கிறார்

இதை அறிந்த ரசிகர்கள் துணிவு திரைப்படத்தில் நடித்தும் அஜித்தை பார்க்காதது எங்களுக்கே சற்று வருத்தம் தான் உங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும் எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவலை தற்பொழுது அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.