தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் அஜித், விஜய், சூர்யாவுக்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸ் ஆகியது.
இந்த படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தமான ஒரு படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே நல்ல பெயரை வாங்கியது போகப் போக குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தனர் அதன் காரணமாக வாத்தி படத்தின் வசூல் அனைத்து இடங்களிலும் வாரி குவித்தது.
தற்போதைய நிலவரப்படி வாத்தி திரைப்படம் சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக சொல்லப்படுகிறது. வருகின்ற நாட்களில் வாத்தி திரைப்படம் நிச்சயம் 100 கோடியை தொட்டுவிடும் என நம்பப்படுகிறது இதனால் நடிகர் தனுஷ் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறனர்.
இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டி வருகிறார் என அப்பொழுது சொல்லப்பட்டது தற்பொழுது 150 கோடி மதிப்பில் வீட்டை கட்டி முடித்து உள்ளார் அண்மையில் கூட தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் பூஜை நடத்தினர்
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் பற்றிய மற்றொரு செய்தி இன்னும் வைரலாகி வருகிறது அதாவது நடிகர் தனுஷுக்கு பிடித்த உணவு குறித்த தான் பார்க்க இருக்கிறோம் நடிகர் தனுஷுக்கு தோசை மற்றும் காரக்குழம்பு என்றால் ரொம்ப பிடிக்குமாம்.