சூர்யாவின் “வணங்கான்” படம் என்னாச்சு – முதல் முறையாக வாய் திறந்த ஜீவி பிரகாஷ்..! வெளிவந்த செம்ம அப்டேட்..

surya
surya

நடிகர் சூர்யா திரை உலகில் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வகையில் இப்பொழுது கூட இயக்குனர் பாலா உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து அவர் நடித்த திரைப்படம் தான் வணங்கான். இந்த திரைப்பட முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயின்னாக நடித்து வருகிறார். இது இப்படி இருக்க அடுத்து நடிகர் சூர்யா உடனடியாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து புதிய படத்தின் பூஜையை அண்மையில் போடப்பட்டு போகிறது. இந்த படம் ஒரு சரித்திர கதையை மையமாக வைத்து உருவாக்குவதாக சொல்லப்படுகிறது.

ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு அது போன்ற ஒரு கதையில் நடிகர்  சூர்யா நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்து வந்துள்ளன. இப்படி இருக்கின்ற நிலையில் வனங்கான் திரைப்படம் என்ன ஆனது அந்த படம் பற்றி ஒரு தகவலுமே வெளிவரவில்லை என ரசிகர்கள் புலம்பி கொண்டு இருந்தனர்.

அதற்கு பதில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் வணங்கான் படம் குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை அவர் கொடுத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. வணங்கான் படத்தின் பாடல்கள் தற்போது ரெக்கார்டிங் ஜோராக நடந்து வருகிறது என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்..

இதை அறிந்த ரசிகர்கள் அப்படி என்றால் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டதா  இதனால் தான் பாடல்களை நோக்கி வணங்கான் படம் நகர்ந்து உள்ளதா என கேள்வி கேட்டு வருகின்ற மேலும் இந்த செய்தியை ரசிகர்கள் பெரிய அளவில் பரப்பியும் வருகின்றனர்.