சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்பவும் “பிடித்த விளையாட்டு” எது தெரியுமா.? அவரே வெளியிட்ட புகைப்படம்.!

rajini-
rajini-

சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருகிறார் இவரது இடத்தை பிடிக்க அஜித் விஜய் போன்ற நடிகர்கள் துரத்தி வருகின்றனர். ஆனால் ரஜினி அவர்களுக்கு நிகராக வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து..

நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து வெற்றி இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருக்கிறது ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து கன்னட டாப் ஸ்டார் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன் மற்றும் பல இளம் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னையில் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழா இன்று நடைபெற இருக்கிறது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க  இருக்கிறார். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செஸ் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு சில பதிவுகளையும் போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு , அனைத்து செஸ் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறி பதிவிட்டார் மேலும் அந்தப் புகைப்படம் இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..