தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென வெள்ளித்திரையில் தலை காட்டினார் முதலில் மேயாத மான் என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்ததால்..
பிரியா பவானி சங்கரின் மார்க்கெட் உயர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் அவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது 2023 ல் கைவசம் 10 படம் வைத்திருந்தார் அதில் பாதி படங்கள் வெளியான நிலையில் மீதி இருக்கின்ற பொம்மை, இந்தியன் 2, டிமான்டி காலனி 2 போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்கள் வெற்றி பெரும்பட்சத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக வலம் வருவார் என சொல்லப்படுகிறது. இப்போ நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு நல்ல காசு வருகிறது இது பத்தாத குறைக்கு நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார் அவ்வபொழுது தனது ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் ரம்ஜானை முன்னிட்டு சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது ரெஸ்டாரண்ட் இருக்கு சாப்பிட சென்றிருந்தார் அப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.. எங்கள் சொந்த லையம்ஸ் டைனர் ரெஸ்டாரண்டில் ரம்ஜானை கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு முன்னேறும் இளம் குழுவை நினைத்து நான் பெருமையாக உணர்கிறேன் இங்கே நாங்கள் சாப்பிட பிரியாணியும், தால்ச்சாவின் ருசி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் இங்கே கிடைக்கும் பேன் கேக் எப்பொழுதும் என்னுடைய ஃபேவரட் என குறிப்பிட்டு இருந்தார் தனது ஹோட்டல் பற்றி இவர் விமர்சித்தது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.