முதல் காதலுக்கும், இரண்டாம் காதலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.! தெள்ள தெளிவாக ரசிகர்களுக்கு எடுத்து சொன்ன DD.! தலையை ஆட்டும் இளசுகள்.

DD
DD

வெள்ளித்திரை, சின்னத்திரை போன்றவற்றில் தனது அசாதாரணமான பங்களிப்பு கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.

இவர் சினிமாவில் டாப் நடிகரின் படங்களில் தலைகாட்டி வந்தாலும் தனது பிரதான தொழிலான தொகுப்பாளினி தொழிலையே அதிகம் நேசிக்கிறார். அதற்கு ஏற்றார் போல விஜய் டிவியும் தொலைக்காட்சியும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக டிடியை தொகுப்பாளராக தக்க வைத்து அழகு பார்த்து வருகிறது.

முக்கியமான நிகழ்ச்சி, விருது வழங்கும், விழா போன்றவற்றை தொகுத்து வழங்கி சிறப்பாக பயணித்து வருகிறார். டிடி சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் லைவ்வாக வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அப்பொழுது ரசிகர் ஒருவர் திருமண வாழ்க்கை தற்போது உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு டிடி இல்லவே இல்லை. முடிந்து போனதை திரும்ப திரும்பி பார்க்க கூடாது சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

மேலும் இரண்டாவது காதல் மீது நம்பிக்கை உள்ளதா என இன்னொருவர் கேட்க அதற்கு பதிலளித்த டிடி. முதல் காதல், இரண்டாம் காதல் என என்ன இருக்கிறது காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. எப்பொழுது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காதல் வரும் ஆனால் ஒரே நேரத்தில் நான்கைந்து பேரை காதல் செய்வது தான் தப்பு என சொன்னார்.