இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் விமர்ச்சகற்களுக்கு இடையேவோ விடுதலை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த விடுதலை திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டால் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் விடுதலைப் படத்தை பார்க்க ஒரு பெண் தன்னுடைய மகளை அழைத்து சென்று இருக்கிறார்.
அதாவது சென்னை ஐநாக்ஸ் தியேட்டரில் விடுதலைப் படம் பார்க்க தன்னுடைய மகளை அழைத்து வந்த பெண்ணை வெளியே போக சொல்லி போலீசார் கூறியிருக்கிறார்கள் இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் 18 வயது ஆகவில்லை என்றால் என்ன என்னுடைய மகள் எந்த படத்தை பார்க்கணும்னு எனக்கு தெரியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அரைகுறை ஆடையில் இருக்கும் படங்களை பார்க்கலாம் ஆனால் இது போன்ற மக்களுக்கு வலி தந்த படத்தை பார்க்க கூடாது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் தியேட்டரில் இருந்த பலரும் அந்தப் பெண்ணுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பே பத்து தல திரைப்படத்தை பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு சென்ற நரிக்குறவர்களை திரையரங்கு ஊழியர் ஒருவர் உள்ளே விடாததும் பெரிய பரபரப்பாக பேசப்பட்டது அது மட்டுமல்லாமல் அவர் மீது வழக்கும் தொடர்ந்தது இது ஒரு பக்கம் பத்திக்கொண்டு ஏறிய மேலும் பூகபமாக வெடித்தது இந்த வீடியோ. இப்படி பத்து தல படத்திற்கும் விடுதலை படத்திற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை இரண்டிற்கும் ஏதேனும் ஒரு சம்பவம் நடக்கிறது என்று கூறப்படுகிறது.