தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது விஜய் உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக வந்தாலும் இந்த படத்திலும் காதல் ரொமான்ஸ் என அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது இதனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு போஷன் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் படம் வெளிவருவதற்கு முன்பாக படகுழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது அதன்படி நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது
இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் அதில் ஒருவராக வாரிசு பட நாயகி ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டார். இவர் முழுக்க முழுக்க ஒயிட் கலர் புடவையில் சும்மா தேவதை போல வந்து அசத்தினார்
மேடையில் ஏறிய அவர் தளபதி விஜய் குறித்து பேசி ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார். அதன் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு செம்ம குத்தாட்டம் மேடையில் போட்டார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
😍🔥#VarisuAudioLaunchpic.twitter.com/CUk8knHH1c
— Hyped For Varisu (@Culprit_Sandy) December 24, 2022