தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகர் விஷால் இவர் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் துப்பறிவாளன்.
இத்திரைப்படத்தை மிஷின் இயக்கியிருந்தார். அதோடு பிரசன்னா உள்ளிட்ட இன்னும் ஏராளமான நடிகர்களும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தது. இந்நிலையில் விஷால் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது சைக்கோ திரைப்படத்திற்குப் பிறகு துப்பறிவாளன் 2 திரைப்படத்தை துவங்குவதற்காக கவனம் செலுத்தி வந்தார் மிக்ஷின். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப் பட்டது. இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக முழு வீச்சில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
ஆனால் திடீரென்று இயக்குனர் மற்றும் விஷாலுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விஷால் இயக்குனர் விலகி விட்டார் என்றும் மீதி உள்ள படத்தை நானே இயக்க உள்ளேன் என்றும் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனவே துப்பரிவாளன் 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் இன்னும் படப்பிடிப்புகள் துவங்கவில்லை. வெளிநாடுகளில் தற்பொழுது பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது எனவே அடுத்த வருடம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விஷால் துவங்கவுள்ளதாக கூறியுள்ளார்.