தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது கமலஹாசன் அவர்களுக்கு நடந்த ஒரு விஷயம் தனுஷுக்கும் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்பொழுது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.
இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியினை பற்றி வருகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷிக் அண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
மேலும் ரசிகர்களும் இந்த திரைப்படத்தினை பார்த்து விட்டு நல்ல விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் தற்பொழுது வரையிலும் அனைத்து தியேட்டர்களும் ஃபுல்லாக புக்காகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் திருச்சிற்றம்பலம் ரிலீசான சில நாட்களிலேயே அதை ஆன்லைனில் கசிய விட்டு விட்டது தமிழ் ராக்கர்ஸ்.
ஆனால் ஆன்லைனில் படம் வந்துவிட்டாலும் திருச்சிற்றம்பலம் படத்தினை தியேட்டரில் பார்ப்பதற்காக மக்கள் முடிவு எடுத்து உள்ளனர் இதன் காரணமாக திருச்சிற்றபலம் ஓடும் தியேட்டர்களில் கொஞ்சம் கூட கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலம் ரிலீசாகி மூன்று நாட்களில் உலக அளவில் ரூபாய் 32.97 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் சோசியல் மீடியாவில் கசிய விட்டது. இருப்பினும் அதையும் தாண்டி பாக்ஸ் ஆபேசில் வசூல் வேட்டையை நடத்தியது இதன் காரணமாக தமிழ் ராக்கர்ஸ் அவர்களால் ஒன்னும் செய்ய முடியாது என ரசிகர்கள் நிரூபித்து காண்பித்துள்ளார்கள். இவ்வாறு விக்ரம் படத்தில் நடந்த அது திருச்சிற்றம்பலத்தில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ்யும் தாண்டி மக்கள் தொடர்ந்து தியேட்டரில் படம் பார்த்து வருகிறார்கள்.