தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்களை மகிழ்வித்து அவர் நடிகை விஜயலட்சுமி. சினிமாவுலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து இருந்தாலும் அங்கு இவரால் பைனல் வரை சென்று கோப்பையை வெல்ல முடியாமல் போனது . அது அவருக்கு பெரிதும் ஏமாற்றத்தை கொடுத்தது.
தோல்வியை வெற்றிகரமாக மாற்ற அவர் தேர்ந்தெடுத்து அடுத்ததாக கலந்து கொண்டு பயணித்த நிகழ்ச்சிதான் சர்வைவர். இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முதலாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நேர்மையாக நடந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அது மட்டுமல்லாமல் மற்ற போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்து அசத்தினார் கடைசியாக கூட மூன்று பேர்களில் ஒருவராக விஜயலட்சுமி இருந்தார் இருப்பினும் இவரது திறமையை மற்றும் புத்திசாலித்தனத்தால் ஒரு கோடி ரூபாயை அள்ளி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.
தற்போது இந்த ஷோ முடிவடைந்தாலும் விஜயலட்சுமிக்கு இன்னும் ஒரு கோடி பணம் வரவில்லையாம். அந்தப் பணம் வந்து விட்டது என நினைத்துக்கொண்டு நெகடிவ் கமெண்ட்டுகளை பலர் கொடுத்து வருகின்றனர் ஆனால் உண்மையில் வரவில்லை என்பதுதான் உண்மை ஏனென்றால் ஒரு ஷோ முடிந்து இரண்டு மாதங்கள் கழித்துதான் அந்த கணமே அந்த பிரபலத்தை வந்து சேருமாம். விஜயலட்சுமி சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து அந்த 100 கோடி பணம் வர சில மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.