சினிமாவுலகில் ரொம்ப கஷ்டப்பட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உச்ச நட்சத்திரமாக மாறியவர் நடிகர் அஜித் அதனால் சினிமா உலகில் நல்லது கெட்டது என பலவற்றை பார்த்து உள்ளார் இப்பொழுது சினிமாவை புரிந்து கொண்டு சரியாக பயணிக்கிறார்.
ரசிகர்களுக்கும் பிடித்து போய் உள்ளதால் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமா உலகில் அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களின் படங்கள் தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வரை படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டண்ட் சில்வா.
இவர் அண்மையில் காவல் திரைப்படத்தில் பணியாற்றினார். இந்த சமயத்தில்தான் நடிகர் அஜித் தற்செயலாக சில்வாவுக்கு போன் செய்துள்ளார். சில்வாவுக்கு போன் செய்து பிசியாக இருக்கிறீர்களா என கேட்டுள்ளார் அதற்கு பெரிதாக ஒன்றுமில்லை காவல் என்னும் ஒரு சிறு படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன் நீங்கள் கூறுங்கள் என சொல்லி உள்ளார்.
இதை கேட்டு கோபம் அடைந்தார் அஜித் ஏனென்றால் படம் என்று வந்துவிட்டால் சிறியது பெரியது என எதுவும் இல்லை. வெற்றி அடைந்தால் அதுவே பெரிய படம் அதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எல்லோரும் சிறிய படங்கள் தொடங்கி தான் தற்பொழுது முன்னேறி உள்ளனர் என கூறினார்.
மேலும் நீங்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு எனது போன் செய்யுங்கள் என கூறி வைத்துள்ளார் இந்த செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இவ்வாறு பேசியது உண்மைதான் என பலரும் கூறி வருகின்றனர்.