Prabhas next movie salary 100 cr : சினிமாத்திரை உலகில் நீண்ட காலமாக பயணித்து வரும் பல முன்னணி நடிகர்கள் கூட தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடித்து வருகின்றனர் அப்படி தமிழ் திரை உலகில் நடித்துக்கொண்டு வருவர்கள்தான் ரஜினி, கமல். அதிலும் குறிப்பாக நடிப்பிற்கு பெயர் போன கமல் கூட சம்பளத்தை கம்மியாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இவரது படங்கள் தற்போது சொல்லும் அளவிற்கு மாபெரும் ஹிட்டடித்த இதற்கு கம்மியாக வாங்குகிறார் என ரசிகர்கள் ஒருபுறம் கூறிக்கண்டு வருகின்றனர் ஆனால் இவரது திறமைக்கு இன்றுவரையிலும் ஈடு இணையாக எந்த ஒரு நடிகரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினி அவர்கள் தற்போது வரையிலும் இளம் நடிகர்களுக்கு ஈடு இணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
இதனால் அவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது இவர் தற்போது சினிமாவுலகில் 70 கோடியை சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த தர்பார் படத்துக்காக இவர் 70 கோடி சம்பளம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர்கள் இருவரையுமே தாண்டி தெலுங்கு நடிகர் பிரபாஸ் அதிக சம்பளம் கேட்டு உள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி அதில் இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார் பிரபாஸ் இதனால் மற்ற நடிகர்களை விட ஐந்து மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
நடிகர் பிரபாஸ் சஹோ படத்தைத் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாரிக்கும் புதிய படமொன்றில் இவர் கமிட்டாகியுள்ளார் இப்படத்தை நாக் அஷ்வின் என்பவர் இயக்குகிறார் இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோன் அவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது இப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.