தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் காதல் கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேடி தேடி நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அதன் பிறகு சினிமாவில் மார்க்கெட்டை இழந்தது மட்டுமில்லாமல் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.
அந்த வகையில் இதுவரை சினிமாவில் மீண்டும் முன்னணி நடிகராக வலம் வர உதவியாக இருந்தது எனவோ மாநாடு திரைப்படம் தான் இந்த மாநாடு திரைப்படம் ஆனது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு பத்து தலை போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது அறிவிப்பார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தன்னுடைய தந்தைக்கு உடல் நிலை குறைவின் காரணமாக நடிகர் சிம்பு அவரை பார்த்துக் கொண்டு வருவதன் காரணமாக தன்னுடைய படப்பிடிப்பு புரமோஷன் என எதிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார் இந்நிலையில் நடிகை ஓவியாவிடம் சிம்புவை பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அந்தவகையில் அவர் கேட்ட கேள்வி என்னவென்றால் சிம்புவைப் பற்றி தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த ஓவியா சிம்புவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளார்கள் அதில் சிலர் பிரேக்கப் ஆகிவிட்டார்கள் அதன்பிறகு வேற என அந்த நிருபர் கேட்டவுடன் ஓவியாவிற்கு கோபம் வந்துவிட்டது போல உடனே நான் என்ன சிம்புவுக்கு பொண்டாட்டியா என ஆங்கிலத்தில் கேட்டுவிட்டார்.
உங்களுக்கு எப்படியோ அதே போல தான் ஓரளவுதான் சிம்புவை பற்றி எனக்கு தெரியும் நான் என்னவோ அவர் கூடவே இருப்பது போல் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என போவியா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.